சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

May 23, 2010

Inspired by You Daddy!! Varanam Ayiram / Forrest Gump

என் சிறு வ‌ய‌தில் நான் அறிந்த‌ க‌தைக்கு நான் அறியாத க‌தையை சொல்லுவார் என் த‌ந்தை. ஆங்கில‌ ப‌ட‌ங்க‌ளை என் ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் நான் அறிந்த‌தை விட‌ என் த‌ந்தையின் இட‌ம் தான் அறிந்தேன். அதை ச‌ற்றே இன்று என் நினைவில் நின்ற‌ பட‌ங்க‌ளும் அவைக‌ளைப் போல் ஒற்றுமையுள்ள‌ ப‌ட‌த்தை இங்கு என் த‌மிழில் கொடுக்கிறேன். த‌வ‌றுக‌ளை புற‌க்க‌ணியுங்க‌ள்
ராணுவ அதிகாரியாய் ஒரு அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கும் நேரத்தில் அவருடைய தந்தையின் மரணச் செய்தி வருகிறது நாய‌க‌னுக்கு. பிளாஷ்பேக்கில் தந்தையின் நினைவுகள் மனதுக்குள் அவிழ, அவை காட்சிகளாக விரிகின்றன இல்லை விவ‌ரிக்க‌ப்ப‌டுகின்றன‌.
த‌ன் வாழ்வில் தான் க‌ற்றுக்கொண்ட‌ அத்தனை விச‌ய‌ங்க‌ளும் த‌ன் த‌ந்தையாலே. அவ‌ரினால் அறிந்துக‌ண்ட‌ க‌ட‌மை,பாச‌ம், காத‌ல், தைரிய‌ம்,த‌ன்ன‌ம்பிக்கை என்ற எல்லா விச‌ய‌ங்க‌ளையும் விவ‌ரித்து சொல்ல‌ப்ப‌டும் ஓர் அழ‌கான க‌தை. இத‌னுள்ளே த‌ன் 8 வ‌ய‌து முத‌ல் த‌ன் தோழியாய் இருப்ப‌வ‌ளின் காத‌லை அறியாது வேறு ஓர் பெண்ணை விரும்பி, அந்த‌ பெண் விபத்தில் இற‌ந்த‌ பின், த‌ன் சிறு வ‌ய‌து தோழியின் காத‌லை உண‌ர்ந்து சேர்வ‌தும், த‌ன் க‌ல்லூரின் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் க‌ற்றுக்கொண்டதை வைத்து ஓர் தொழில் தொட‌ங்கி அதில் வெற்றியும் காணும் இவ‌ர் க‌டைசியில் ராணுவ‌த்தில் வ‌ந்து இணையும் இவ‌ரை அங்கிருந்து பின்னோக்கி ந‌க‌ர்த்தும் க‌தை வார‌ண‌ம் ஆயிர‌ம்.

இதே க‌தையை ஒற்றிய‌ நான் ர‌சித்த‌ ப‌ட‌ம் ஆஸ்காரை 1994’ல் த‌ழுவிச்சென்ற‌ FORREST GUMP. சிறிதே வித்யாச‌ப்ப‌ட்டாலும் க‌ரு ஒன்றாக‌வே நான் உண‌ர்ந்தேன்.த‌ன் வேலைக்காக‌ ராணுவ‌த்தில் சேரும் இவ‌ர் அங்கு அறிமுக‌மாகும் ந‌ண்ப‌ரிட‌ம் க‌ற்றுக்கொண்டு தொழிலினை செய்து அதில் வெற்றியும் கண்ட‌ இளைஞ‌ராய் அங்கிருந்து பின்னோக்கி ந‌கரும் க‌தை. இதில் க‌தையின் நாய‌க‌ன் த‌ன் முழு வெற்றிக்கு தூணாக‌ த‌ன் தாய் இருப்ப‌தாக‌ கூறுவ‌தும், சிறு வ‌ய‌து முத‌லே த‌ன்னுட‌ன் இருக்கும் தோழியை காத‌லித்தும் அதை உணராது இருக்கும் அவ‌ள் பின் உண‌ர்வ‌தே சிறிது மாற்ற‌த்தை த‌ருகிற‌து. ம‌ற்ற‌னைதும் இனிதே!!
இது விம‌ர்ச‌ன‌ம் அல்ல‌, என் எண்ண‌ குவிய‌லே, இதை போன்று தாங்க‌ள் அறிந்த‌ ர‌சித்த‌ ப‌ட‌ங்க‌ள் இருப்பின் இரு ப‌ட‌ங்க‌ளின் பெய‌ரை பின்னூட்ட‌த்தில் இடுக‌

Create a free website or blog at WordPress.com.