சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

June 5, 2010

இய‌ல்த‌மிழிற்காக‌, இசைத்த‌மிழ்!!..

Advertisements

October 22, 2009

ராம‌னின் த‌லைதீபாவ‌ளி!!…

எத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் ஆனாலும் தீபாவ‌ளியின் மேலுள்ள‌ ஈர்ப்பு ம‌ட்டும் என்றும் குறையாது. தீபாவ‌ளியை வ‌ர‌வேற்ற‌ ப‌திவிக‌ளை வாசித்த‌ என‌க்கு ப‌திவுக‌ளில் கிடைக்காத‌ இந்த‌ விச‌ய‌ம் ச‌ற்று ஆச்ச‌ர்ய‌மான‌து. தீபாவ‌ளி திருவிழாவான‌து ஜோதிக‌ளின் விழா என்றும் நர‌காசுர‌னை க‌ண்ன‌ண் வ‌த‌ம் செய்த‌ நாளாக‌வும், நாம் தீபாவ‌ளியை கொண்டுகிறோம் என்பீர்க‌ள், இல்லையா? குறைந்தப‌ட்ச‌ம், என்னிட‌ம் யாராவ‌து கேட்டால் நான் இதை தான் சொல்லியிருப்பேன். ராம‌ன் த‌ன் த‌லைதீபாவ‌ளியை காட்டில் கொண்டாடினானா இல்லை த‌ன் நாட்டில் கொண்டாடினான‌ என்ற துணுக்குக‌ளுக்கு, ராம‌வ‌தார‌துக்கு அடுத்த‌ அவ‌தார‌மே கிருஷ்ண‌வ‌தார‌ம் அத‌னால் ராம‌னின் கால‌த்தில் திபாவ‌ளி கிடையாது என்று எவ‌ரோ சிறு வ‌ய‌தில் சொல்ல‌க்கேட்டு அதை ந‌ம்பியே இருந்துவிட்டேன். நான் கேட்டு ரசித்த‌ புது த‌க‌வ‌ல். த‌ச‌ர‌த‌ரால் நாடுக‌ட‌த்த‌ப‌ட்ட‌ ராம‌ர், வ‌ன‌த்தில் 14வ‌ருட‌ங்க‌ளை க‌ழித்தார். அப்போது இல‌ங்க‌யின் ம‌ன்ன‌ன் ராவ‌ண‌ன் அவ‌ளை க‌ட‌த்த‌ ல‌க்ஷ்ம‌ண‌ன்,அனுமாரின் உத‌வியுட‌ம் ராவ‌ண‌னிட‌ம் யுத்த‌ம் செய்தார் ராம‌ர். த‌ன‌து விஷேச‌ த‌னுசினை க‌டைசியில் பிரோயோகிக்க‌ அது ராவ‌ணின் நெஞ்சை கிழித்து போரை முடிவுக்கு கொண்டுவ‌ந்த‌து. அர‌க்க‌ர்க‌ளின் ஆட்சி முடிந்த‌தில் உல‌க‌மே ச‌ந்தோச‌ப்ப‌ட்ட‌து. வான‌தேவ‌ர்கள் பூ தூவ‌, ம‌க்க‌ள் புத்தாடையுடுத்தி ம‌ல‌ர் செண்டோடு வ‌ழியெங்கும் நிறைந்திருக்க‌, இல்ல‌ங்க‌ள் எங்கும் தியா என‌ப்ப‌டும் எண்ணை விள‌க்கேற்றி ம‌கிழ்ச்சியுட‌ன் ராமர்,சீதை,ல‌க்ஷ்ம‌ண‌ன் ம‌ற்றும் ப‌டையின‌ரை வ‌ர‌வேற்ற‌ன‌ர். இதை தான் தீபாவ‌ளியாக‌ இன்றும் கொண்டாடுகிறோமாம். எது எப்ப‌டியோ!!.. தீபாவ‌ளி அன்று புத்தாடை த‌ரித்து, பல‌கார‌ங்க‌ளை வெளுத்துவாங்க‌வும், ப‌ட்டாசுக‌ளை வேடித்துத்தீர்க்க‌ ம‌கிழும் ம‌ன‌திற்கு கார‌ண‌ம் தேவ‌யா என்ன‌??

September 2, 2009

சூடான‌ பால்…. கொடுமை க‌ட‌வுளே!!…


க‌ட‌ந்த‌ வார‌ம் இத்தாலிக்கு சுற்றுலா போயிருந்தோம். நம‌க்கு எல்லாம் தெரிஞ்ச‌ ரோம் ந‌க‌ர்ல‌ ரெண்டு நாள் த‌ங்கி இருந்தோம்.. அது ஒரு B&B விடுதி, அதாவ‌து ப‌டுக்கையும், ப‌க‌ல் சிற்றுண்டியும் இணைந்த‌ விடுதி. நாங்க‌ அங்க‌ த‌ங்கி இருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ஒரு ந‌கைசுவையான‌ ச‌ம்ப‌வ‌த்த‌ இங்க‌ உங்க‌ளோட‌ பகிர்ந்துக்கிறேன். எங்க‌ விடுதியோட‌ மேலாள‌ர் ஒரு ஜ‌ப்பான் பெண். காலைல‌ எங்க‌ளுக்கு கிராய்ச‌ன்(ந‌ம்ம‌ ப‌ன்னு தாங்க‌, ஆனா உள்ள‌ இனிப்பா இருக்கும்) டிக்காஷ‌ன் காபியும் கொடுத்தா, என்னோட‌ ந‌ண்ப‌ன் அவ‌ள்ட‌ சூடான‌ பால் வேணும்னு கேட்டான். ச‌ரின்னு சொல்லிட்டு போன‌ பொண்ணு 10 நிமிட‌ம் க‌ழிச்சு வ‌ந்து மெஷின் வேலை செய்ய‌ல‌ அதுனால‌ குளிர்ந்த‌ பால் த‌ர‌வான்னு கேட்டா. நாங்க‌ வேண்டாம் சூடான‌ பால் தான் வேணும்னு கேட்க‌, ஒரு 20நிமிட‌ம் காத்திருக்க‌ சொன்னா. நாங்க‌ளும் ஒரு 40நிமிட‌ம் காத்திருந்த‌ பின் பொறுமையிழ‌ந்து போய் அந்த‌ பெண்ணிட‌ம், “எவ்வ‌ள‌வு சூடு இதுவ‌ரைக்கும் ஆகி இருக்கோ, அது போதும்னு.. இனியும் சூடாக்க‌ வேண்டாம் பால‌ கொடுங்க‌”னு கேட்டோம். அந்த‌ பொண்ணும் உட‌னே ஜ‌ன்ன‌ல்ல‌ இருந்து பால் இருந்த‌ க‌ப்ப‌ எடுத்துச்சு. அப்போதான் எங்க‌ளுக்கு பால் சூடாக‌ என் இவ்ளோ தாம‌த‌ம்னு புரிஞ்சுது. அம்ம‌ணி, ப‌க‌ல் 7.30 ம‌ணி சூரிய‌ வெயில்ல‌ பால‌ சூடாக்கிட்டு இருந்துக்கிறாங்க‌… அப்டியே த‌லைய‌ ரோம் சுவ‌த்துல‌ முட்டிக்கிலாம் போல‌ இருந்துச்சு.
என்ன‌ ப‌ண்ற‌து, ந‌ல்ல‌ வேலை குளிர்ந்த‌ காபி கேக்க‌ல‌, கேட்ருந்தா ந‌டுராத்திரி 2 மணிக்கு தான் கொடுத்துருப்பாங்க‌ளோ என்ன‌பவோ நின‌ச்சுகிட்டோம்!!..

August 6, 2009

சாப்பாட‌ எப்ப‌டி சாப்டா என்ன‌???

சாப்டும் போது கைல நல்லா பிச‌ஞ்சு சாபுடுடா, அப்ப‌டின்னு எங்க‌ப்பா சொல்லும் பொது கோவமா வ‌ரும். ஏன்னா சாப்பாடுக் க‌ர‌ண்டில‌ (spoon’la) சாப்டா, உட‌ம்புல‌ ஒட்டாதுங்ர‌து எங்க‌ வீட்ல‌ உள்ள‌ ஒரு ந‌ம்பிக்கை. எப்ப‌டி சாப்டாலும் சாப்பாடு வ‌யித்துக்குல்ல‌ தான‌ போகுது அப்ப‌டின்னு க‌த்தி சொல்ல‌னும்னு தோணும். ஆனா சொல்லாம‌ அமைதிய‌ இருந்திருவேன். எதுக்குங்க‌ சொல்லுவானேன் அப்ற‌ம் அடி வாங்குவானேன் :~)

ஆன‌ மே மாச‌ ஆனா போதும், நாட்டாமை மாதிரி க‌ட்ரா வ‌ண்டிய‌ அப்ப‌டின்டு எங்க‌ தாத்தா வீட்டுக்குப் போய்ருவோம். அங்க‌ கைல‌ தான் சாப்டாக‌னும், நானும் ரொம்ப‌ நாள் கிராம‌ம்ராதால‌ தான் தாத்தா வீட்ல் க‌ர‌ண்டிலாம் இல்ல‌னு நின‌ச்சேன். ஒரு த‌ட‌வ‌ வாங்க‌ வேண்டிய‌துதான அப்டினு கேட்ட‌துக்கு எங்க‌ தாத்தா கொடுத்த‌ விள‌க்க‌த்துக் க‌ப்ற்ம், கைல‌ சாப்ட்ற‌ ச‌ந்தோச‌ம் க‌ர‌ண்டில‌ கிடைக்க‌லைங்க‌….

அவ‌ரு சொன்னாரு, “அடேய் ம‌ட்டி, சாப்டுற‌துக்கு முன்னாடி இன்னைக்கி என்ன‌ ச‌மைய‌ல்னு பாட்டி போடுற‌ ப‌ட்டிய‌ல‌ கேட்டு ஒன் காது நிரஞ்சிறும், சாப்பாடெல்லாம் பாக்கும் போது க‌ண்ணு நிற‌ஞ்சிறும், அத‌ உன் கை ப‌க‌த்துல‌ வைக்கும் போது அந்த‌ வாச‌னையை மோர்ந்து பார்து மூக்கு நிரஞ்சிறும, அத‌ சுவைகும் போது வாய் நிரஞ்சிறும், ஆனா ச‌ம்ம‌ன‌ம் போட்டு ஒக்காந்து, ஒட‌ம்ப‌ குனிஞ்சு சாப்பாட‌ தொடும் போது, சூடு, குளிர்ச்சி, க‌டின‌ம், நீர்த்த‌ன்மை இப்ப‌டி எல்லாதயும் உண‌றும் போது தான் மெய் நிரஞ்சிறும், இப்ப‌டி அஞ்சும் நிர‌ஞ்சா தான் அது சாப்ட‌துக்க‌ர்த‌ம்.. அது இந்த‌ கால‌ணா க‌ர‌ண்டில‌ கிடைக்காதுடா”ன்னு…

அப்ப‌ தான் புரிஞ்சுது .. க‌ர‌ண்டில‌ சாப்டா என் ஒட்டாதுங்ர‌துக்கு அர்த‌த‌த‌…

August 4, 2009

காள‌மேக‌ப் புல‌வ‌ருக்கு க‌டி

Filed under: பா.கே.ப — Anantha @ 11:05 pm

நாகைக்கு வந்திருந்த காளமேகம் பசியால் வாடிப் போய் உட்கார்ந்திருந்தார். காத்தான் சத்திரத்தில் சாப்பாடு தயாராகத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. தெருவில் சிறுவர்கள் பாக்குக் கோட்டையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.(பிற்காலத்தில் கோலி குண்டு ஆட்டம்). சாப்பாடு காசு கொடுத்து வாங்கியாவது சாப்பிட நினைத்த காளமேகம் ஒரு சிறுவனை அழைத்து,

“தம்பீ, சோறு எங்கப்பா விக்கும்?” என்று அயர்ச்சியோடு கேட்டார்.

அந்தச் சிறுவன் சிரித்துக் கொண்டே

“சோறு தொண்டைலே விக்கும்” என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டான்.

சிலேடைச் சிங்கம் காளமேகம் இந்த பதிலில் வியப்புற்று, பசியையே மறந்தார்.
கையில் கிடைத்த கரித் துண்டை எடுத்துக்கொண்டு, காத்தான் சத்திரத்தின் சுவற்றில்

“பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர் நாவில் தமிழ் தெறிக்கும் திருநாகை”
என்று எழுதினாராம்.

Next Page »

Blog at WordPress.com.