சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

May 23, 2009

பொய் சொல்வேன்… ர‌சிப்பாயா??

என் இத்த‌னை வ‌ருட‌
கேள்விக‌ளுக்கெல்லாம்,
ஒரு ப‌தில் கேட்டேன்..
நீ கிடைத்தாய்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் சின்ன‌ப்பார்வை எனில்படிய‌
தெரு விள‌க்கின் தோழ‌னானேன்,
உன் உத‌ட்டுப்புன்ன‌கை வ‌ர‌க்காண‌,
பேருந்து ப‌டிக்க‌ட்டின் வாலானேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

க‌ட‌வுள் வ‌ந்து வ‌ர‌ம் கேட்டால்,
எனை க‌ட‌வுளாக்க‌ வ‌ர‌ம் கேட்பேன்..
நீ ஆசைப்ப‌ட்ட‌து கேட்கும்முன்னே – அதை
அளித்திட‌ உன்னுட‌ன்ம‌ட்டும் இருக்க‌க்கேட்பேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புழுவாய் எனை நீ
பார்த்த‌ நாள்க‌ளில்..
உல‌கின் விளிம்பில் ம‌ர‌ண‌ம் கேட்டேன்..
புதிதாய் தின‌ம் நான்
தெரிவ‌தாய் உரைக்க‌யில்..
உதிர‌ம் முழுதும் ஜ‌னிப்ப‌தாய் உண‌ர்ந்தேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இல்லை எனும் ப‌திலை,
உன் க‌ண் கொடுத்தால் – அந்த
இமைக்கும் ச‌த்த‌ம் கேட்டே,
என் இத‌ய‌ம் தூளாகும்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று காணும் உற‌க்க‌த்தை,
நாளை காணும் சோம்ப‌லை,
நேற்று க‌ண்ட‌ க‌ன‌விற்கு ~ நான்
விருந்தாய்த‌ந்து வேறு காண‌க்கேட்பேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Advertisements

May 3, 2009

முக‌வ‌ரி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ முக‌ங்க‌ள்…

Filed under: கவிதை — Anantha @ 4:14 pm
Tags: ,

எத்த‌னையோ இன்ப‌ங்க‌ள் இங்கிருக்கு,
என்ற‌ இருமாப்பிலே நானிருக்க‌..
யுத்த‌மும் ச‌த்த‌முமாய் ப‌ர‌விக்கொல்லும்,
ஈழ‌ரை க‌ண்ட‌தும் க‌ண்ணீர்கொண்டேன்..

வெடிக‌ளை த‌ழுவிடும் கைக‌ள்,
ப‌ழிவெறியினை எந்திய‌ க‌ண்க‌ள்..
க‌ஞ்சிக்கு வெடிக‌ளை தொட்டுக்கொள்ள‌,
நெஞ்செங்கும் ப‌டிந்த‌ நினைப்பு..
விந்தையில்லை, இதுவே அவ‌ர்‌ வாழ்க்கை…

வீட்டின்விரிச‌லில் ந‌ட்ச‌த்திர‌தினை காணாது,
விய‌ர்க்க‌ செய்யும் வெடிம‌ழையெத‌ற்கு…
க‌ல்லுக்குள் வாழ்ந்திடும் தேரைபோல‌,
கான‌க‌தினுள் ம‌றைத்திருக்கும் தேவையென்ன‌…

வித்துக‌ளும் இங்கு வாளேந்தி,
யுத்த‌ம‌த‌த்தை வ‌ள‌ர்ப்ப‌து எத‌ற்கு??
குச்சுக‌ள் க‌ச்சைக‌ள் மொத்த‌மிழ‌ந்து,
பிச்சை வாழ்க்கை வாழ்வ‌தென்ன‌..

புழுதிக‌ள் ப‌டியும் வீதிக‌ளில்,
உதிர‌ங்க‌ள் ப‌டிவ‌து எத‌ற்காக‌..
அக‌நானூற்றின் அன்புத‌னை இங்கு,
ஆட‌வ‌ர் பெண்டீர் துற‌ந்த‌தென்ன‌..

க‌ருப்பினை ம‌ட்டும் அணிந்த‌தென்ன‌,
தா(க்)க‌த்தில் தீவிற்குள் சாவ‌தென்ன‌..
உயிருண்டென்று உரைத்திட்ட‌ அழுகைத‌னை,
உயிர்துற‌க்கும் வ‌ரையிலும் நிரைப்ப‌தென்ன‌..

வேருன்றிய‌ செடியினை இட‌ம் மாற்ற‌யிலும்,
நாம் ம‌ண்ணை விட்டு பெய‌ர்த்த‌ல்லை..
தாய் ம‌ண்ணை விட்டுப் பெய‌ர்த்தெடுத்து,
இந்த‌ ம‌னித‌ரை மாற்றும் தேவையென்ன‌..

ஒற்றைமுறை வ‌ரும் வாழ்க்கைய‌டா..
பிர‌ச்ச‌னை பொசுக்கிடு, அங்க‌த்தை விட்டுவடு..
பிஞ்சுக‌ள் கொஞ்ச‌ம் ப‌டிக்க‌ட்டுமே,
தாய் ம‌ண்ணை பிரிந்த‌வ‌ர் சேர‌ட்டுமே..
மெள‌ன‌ம் கொஞ்ச‌ம் ப‌ர‌வ‌ட்டுமே,
ம‌ன‌ங்க‌ளில் அமைதி த‌வ‌ழ‌ட்டுமே..

ஈழ‌த்த‌மிழ‌னின் குர‌லிற்கு இது,
இந்திய‌ த‌மிழ‌னின் குற‌லில்லை..
த‌லைமுறையாய் தொட‌ரும் வ‌ன்முறைக்கு,
முடிவுரை கெஞ்சும் வாச‌க‌ன் நான்..

என் எழுத்தில் எதையோ விட்டிருப்பேன்,
எனினும் ஒன்றைம‌ட்டும் உரைக்கின்றேன்..
இதில் அர‌சிய‌ல் ப‌ண்ண‌ வேண்டாமே,
எதிர்கால‌மேனும் அமைதியில் த‌ழைக்க‌ட்டுமே..

March 7, 2009

ப‌ழ‌கிக்கொண்டேன்…

Filed under: கவிதை — Anantha @ 1:25 am

இழ‌ப்பு என்ப‌தொன்றும்,
என‌க்குப் புதிதில்லை –  ஆம்…
இழ‌ப்பு என்ப‌தொன்றும்,
என‌க்குப் புதிதில்லை….

என் தாயின் க‌ருவ‌றையில்,
செள‌க‌ரிய‌மாய் நான் வ‌ள‌ர‌,
ஏனோ எனை பிரித்தாள்,
இழ‌ப்பை என்கையில் கொடுத்தாள்…

இருந்த‌ வீட்டை இழ‌ந்த‌,
ஏழை குடியான‌வ‌ன் போல் நான் அழ‌,
இன்முக‌த்தையும், புன்முறுவ‌லையும்,
ஒன்ற‌ன் மேல் ஒன்றாய் அடுக்கினாள்,

ச‌ற்றே நோடிக‌ளில்,

அம்மா அப்பா சொந்த‌ம் ப‌ந்த‌மென்ற‌
அங்கிருந்த‌ அனைவ‌ரும் எனை தாங்கின‌ர்..
சிரித்து புரிந்து கொண்டேன் –  இங்கு
இழ‌ப்பிற்கு பின் ஏதெனும்,
நல்ல‌து ஒன்று உண்டென்று…

அன்றோடு ம‌ற‌ந்தேன், துற‌ந்தேன் – ஆம்
அழுவ‌து வீணென்று உண்ர்ந்தேன்

அன்றிலிருந்து,

இழ‌ப்பு என்ப‌தொன்றும்,
என‌க்குப் புதிதில்லை

October 9, 2008

அந்த‌ நாள் ஞாப‌க‌ம்…

Filed under: கவிதை — Anantha @ 11:14 pm

சோவென்று பெய்த‌ ம‌ழையில்
தொப்ப‌லாய் ந‌னைந்த‌ என்னை,
குளித்து துவ‌ட்டிக்கொண்டேன்…
என் முக‌த்தை ச‌ரிபார்க்க‌ச்சென்றேன்.
நினைவு தெரிந்த‌ நாள்முத‌ல்,
எனை நித‌மும் பார்த்த‌ நிழ‌லில்..
எத்த‌னையோ மாற்ற‌ங்க‌ள் க‌ண்டேன்,
என்னென்று சோதிக்க‌ ஆய‌த்த‌ங்கொண்டேன்.

க‌ண்ணிற்கு கீழ் என்ன??…
க‌ருவ‌ளைய‌மா? முக‌ச்சுருக்க‌மா?..
மீசையை சீர் செய்ய‌ வேண்டும்!
ம்ம்..என்ன‌யிது அத‌ற்குள்ளாவே..
எப்ப‌டியும் ச‌வ‌ர‌ம் செய்து,
ஏழு நாட்க‌ள்கூட‌ ஆக‌வில்லை..
இப்ப‌டி வ‌ள‌ர்கிற‌தே தாடி?
ஏதும் க‌ர‌டிக்கு தீங்கிழைத்தேனோ..

ஏ, க‌ண்ணாடியே.. பித‌ற்றுகிறேனா!!..
ப‌திலுறைத்தால் தான் என்ன‌..

ச‌ட்டென்று தெரித்த‌தோர் மின்ன‌ல்,
ச‌ரியாக‌ச் சூழ்ந்த‌து என்னையோர் இருள்..

ச‌ப்த‌ங்க‌ள் அட‌ங்கிய‌து கொஞ்ச‌ம்,
ப‌ளீர் சிரிப்போடு அங்கு என் பிம்ப‌ம்..

“என் இனிய‌ ந‌ண்பா!! எங்ங‌ண‌முள்ளாய்..
எத்துனை நாளாயிற்று என்னுட‌ன் பேசி..
நித்த‌மும் உனைபார்க்கும் இத்துனைநாளில்
எத்துனை முறை நீ உனை பார்க்க‌க்க‌ண்டாய்”

பிம்ப‌த்தின் குர‌லால் ச‌ற்றுகுழைந்த‌வ‌ன்
ப‌ருவ‌ நாட்க‌ளை புர‌ட்ட‌ துவ‌ங்கினேன்..

காலையில் எழுகையில் க‌ண்முன்னே எனைப்பார்த்து,
என்ன‌டா அன‌ந்த? எப்ப‌டித்தூக்க‌ம் என்ற‌துமுத‌ல்,

ப‌ல் துல‌க்க‌ துவ‌ங்கிய‌து முத‌ல்,
ப‌ள்ளிச்சீருடை அணிவ‌து வ‌ரை…
பாவ‌மாய் முக‌ம் வைத்துக்கொண்டு
கோப‌மாய் க‌திர‌வ‌னை ப‌ழிதீர்க்க‌ சொல்லி
திட்ட‌ங்க‌ள் போட்டுக் கொள்வேன் _அந்த‌
க‌ண்ணாடி அன‌ந்துவின் தோள்த‌ட்டி செல்வேன்..

நாளொரு மேனி, பொழுதொரு வ‌ண்ண‌ம்.
என்ற‌ ப‌ள்ளிப்பாட‌த்தை ப‌ரீட்சிக்க‌..
நான் வ‌ள‌ர்ந்தேனா.. நான் வ‌ள‌ர்ந்தேனா._என்று
என் வீட்டுக்க்ண்ணாடியை எட்டிப்பார்த்த‌ நாளுண்டு,

வ‌குப்ப‌றையில் வாத்தியாரை பார்கையில்,
வைத்துக்கொள்ளும் முக‌பாவ‌ம் ப‌ழ‌கிய‌துண்டு..

ப‌ற்ப‌சை முத‌ல் முக‌ப்ப‌சை வ‌ரை எல்லாமிட்டு
வெள்ளை தாடி வ‌ள‌ர்ந்த‌தாய் ம‌கிழ்ந்த‌துண்டு.

பாட‌ங்க‌ளை ப‌டிக்க‌ச்சொல்லி கேட்பாள்..
ப‌க்க‌த்த‌றையில் விட்டுச்செல்வாள் என் அம்மா..

க‌த‌விடுக்குச் சாலையில் கண்ணாடி வீதியில்
தொலைகாட்சி நிக‌ழ்ச்சிக‌ண்டு நிம்ம‌திகொள்வேன்..

வ‌ள‌ராத‌ மீசையை முறுக்கிப்பார்துள்ளேன்,
வ‌ண்ண‌ புகைப‌ட‌ங்க‌ளை இணைத்துப்பார்துள்ளேன்..
வாச‌லில் தோழிக‌ள் வ‌ருவ‌தை அறிந்தால்,
வ‌குடுக‌ளை ச‌ரிசெய்ய‌ நெடு ஓட்ட‌ங்கொள்வேன்..

புத்தாடைக‌ளை பார்ப‌து முத‌ல் – பாஷை
வித‌வித‌மாய் பேசிப்ப‌ழ‌கிய‌து வ‌ரை..
ப‌ல‌வ‌கையாய் ப‌ட்டிய‌ல் இடுவேன் _ என்
ப‌டுக்கைய‌றை க‌ண்ணாடி உற‌வை

எத்த‌னை சுட்டித் த‌ன‌ம் என்னில்
என்று எண்ணிச் சிரித்த‌ வேளையில்
ப‌ளிச்சென்று வ‌ந்த‌ மின்சார‌த்தில்
பளீர் சிரிப்போடு நின்ற‌ எனை பார்தேன்

அய்யோ.. அய்யோ…
என்க்கு நானே வெட்க‌மும்கொண்டேன்..

October 6, 2008

கேட்க்கிறாயா!!…

Filed under: கவிதை — Anantha @ 10:01 pm


நீயா!! என் வாழ்கையா!!

எது முக்கிய‌மென்று?

என்ன‌வ‌னே நீ கேட்ட‌போது,

“என் வாழ்க்கை”,,

என்று  நான் கூறிய‌தில்,

என்ன‌ பிழை க‌ண்டாய்?..

ஏன் எனை வெறுத்துச்சென்றாய்..

எனை புரிந்துகொள் காத‌லா..

உனை காத‌லிக்கும் என‌க்கு,

நீதான் வாழ்க்கையென்று…

~அன‌ந்த‌ ராம‌கிருக்ஷ்ண‌ன்~

« Previous PageNext Page »

Blog at WordPress.com.