சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

September 25, 2011

விமானத்தில் இயல் இடைவெளி!!..

Filed under: கவிதை — Anantha @ 11:30 pm
Tags: , , ,

Advertisements

September 11, 2011

என் (க‌ல்லூரி நேர‌த்து) திரும‌ண‌ ம‌ட‌ல்

Just saw this Poem, while I was digging my old archives. Thought of sharing it with you all. I just wrote this for one of my Engineering college friend for his sister’s marriage. This was made as a banner. I am not a good poet at all, but still loves those days my friends encouraged me to keep me writing for some or other.

May 14, 2010

எனில் என்னை பாரடா??

July 1, 2009

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்…

Filed under: கவிதை — Anantha @ 6:09 pm

வ‌ருட‌த்தின் ஒரேஒரு நாளில்
வ‌ந்து போகும் இந்த‌ நாள்…
ஒற்றை முறை வாழ்த‌துச்சொல்ல‌,
எனை காக்க‌வைத்த‌ ஓர் இனிய‌நாள்…

இந்த‌ நாளில் உனை வாழ்த்த‌
364 நாட்க‌ள் நான் உருகிய‌தை!!..
என் மெழுகு உரைப்ப‌து கேக்கிற‌தா..
அதை ஊதி நீ சிரிக்கையில்,
சிலிர்த்துக் குளிர்வ‌தை உண‌ர்கிறாயா??
மெழுகும் என் ம‌ன‌மும்…

உன் கேக்கின் மெழுகுவ‌ர்த்திக‌ள்,
நீ வாழ்ந்த‌ நாளை காட்டிவிடும்,
இனி வரும் நாட்க‌ளிலும்,
மெழுகுக‌ள் ம‌ட்டும் கூடிடாது…
உனை வாழ்த்தும் உற‌வுக‌ளை கூட்டிவிடும்..

அடிம‌ன‌து வார்த்தைக‌ளே ஆழ‌மெனில்,
அதற்கும் அடியிலிருந்து கூறுகிறேன்…
இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்..

May 29, 2009

பார‌திக்கு, க‌ண்ண‌ம்மா.. நீ என‌க்கு!!

Filed under: கவிதை — Anantha @ 8:51 am
Tags:

ச‌ல‌ச‌ல‌க்கும் காற்றும்,
சித‌றாத‌ ஒளியும்,
பிசிராது ஏந்திச்செல்ல‌
வ‌ர‌ம்கேட்கும் ஓவிய‌ம்..

புன்ன‌கைக்கும் க‌ன்ன‌க்குழியில்
பூக்க‌யாசிக்கும் என் வீட்டுச்செடிக‌ள்..
க‌ண்ணின் விழி பார்க்கிற‌தா? இல்லை
க‌ண்ணிமை தான் தாழ்ந்துள்ள‌தா??
சின்ன‌ஞ்சிறு ஜ‌ன்ன‌ல் வ‌ழி..
இந்த‌ பொன்னுல‌கை காண்ப‌தெங்கே??
ம‌ச்ச‌ விழியோ!! மான் விழியோ|| அதில்
மிச்ச‌மெங்கே சொல்ல‌டி என‌க்கு..

எத்துனை நாள் கேட்டாலும்,
தெவிட்டாது உன் பேச்சு..
ஏந்திச்செல்லும் நாளனைத்தும்,
இன்ப‌டி யாவ‌ருக்கும்..

உனை உரித்துரைக்கும் வார்தைக‌ளை
எங்கென‌மோ தொலைத்துவிட்டார்..
என் த‌மிழ் மூதாதைய‌ர்.. ‍ என்ப‌தால்
இப்போது முடிக்கிறேன்..
வ‌ந்த‌பின் கூறுகிறேன்..
பொறுப்பாயா அதுவ‌ரையில்??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ம‌ழையில் அழுதிடு , அது
தெரியாம‌ல் ம‌றைந்திடும்..
என்றானாம் எவ‌னோ ஒருவ‌ன்…
நீ
ம‌ழையில் ம‌ட்டுமில்லை,
ம‌ற‌ந்தும் ம‌ன‌திற்குள் அழுதிடாதே!!..
உன்னை
சுற்றியுள்ள‌ எல்லோருக்கும் கேட்டுவிடும்!!..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
காற்றை இலை ம‌ற‌ந்தாலும்,
நீரை வேர் வேறுத்தாலும்,
நில‌த்தை செடி துற‌ந்தாலும்,
உன் சூரிய‌விழி க‌ண்டால் போதும்..
இங்கு
அத்த‌னை ம‌ழ‌ரும் அழ‌காய் ம‌ழ‌ரும்…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.
மொழிக‌ளுக்குள் த‌ர்ணா தேவையா?
க‌விதைக‌ளே..
உங்கெளுக்கென்று க‌விதை கேட்ப‌தை
குறைத்துக் கொள்ளுங்க‌ளேன்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.

Next Page »

Create a free website or blog at WordPress.com.