சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

July 18, 2012

Do would mind saying “A Lie or Truth”??

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 10:49 am
Tags: , , ,

Let me know which looks correct to you..

An English Saying:
A harmful truth is always better then…a useful lie! — Eric Bolton

Tamil Saying

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

Translation:
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.

Explanation: Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.!!– –Thiruvalluvar

Ideally I would vote for the Tamil one as I feel it applies globally. Even if a lie can bring a peace and good equally as a Truth brings, there is no harming in telling the lie. Let me know your opinion.

Source: http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html

Advertisements

June 23, 2010

வீர‌ம்ங்ற‌து…

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 9:48 pm
Tags: , ,

குறள் 772:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

கலைஞர் உரை:
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது,
வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

மு.வ உரை:
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட,
வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை:
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட,
எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

Translation:
Who aims at elephant, though dart should fail, has greater praise.
Than he who woodland hare with winged arrow slays.

Explanation:
It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

 Subscribe in a reader

February 26, 2010

வைக்கோலும் ம‌த‌யானையும் ஒன்றே- காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 8:41 am

வாரிக் கள‌த்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்


வைக்கோல்
வாரிக் கள‌த்தடிக்கும் – அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் – அது பின் கோட்டைக்குள்ளே (ப‌ண்ட‌க‌ சாலை, Godown, Warehouse) சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள‌த்தடிக்கும் – பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் – பின்னே பகயரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – இவ்வாறாக போர்த்துரையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

சீருற்ற – சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன் – செந்நிறமான மேனியுடைய
வரையில் – மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை – வைக்கோலும் மதயானை
யாம் – எவ்வாறு எனில்

January 2, 2010

கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்- காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:26 pm

யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்

கண்ணாடி:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – யாருக்கும் அவரவர்களாகவே தெரிந்து
தீது அகலக் பார்த்தலால் – தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால – தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

அரசன்:

யாவர்க்கும் ரஞ்சனை செய்து – எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலக் பார்த்தலால் – தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் – மேல் கொண்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்

December 23, 2009

பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:39 pm

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!

பூசணிக்காயானது :

அடி நந்தி சேர்தலால் – அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் – உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு – ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு – அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் – வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! – பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!

சிவபெருமான் :

அடிநந்தி சேர்தலால் – திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் – திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு – ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு – சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.

Next Page »

Create a free website or blog at WordPress.com.