சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

December 1, 2011

ஏதோ தோணுச்சு, சொல்லிட்டேன்!!. – 1

இன்னைக்கு என்னவோ தெரில “தசாவதாரம்” படம் பார்க்கனும் போல இருந்துச்சு, பார்த்தேன். கமல் சாரோட ஒவ்வொரு படத்துலயும் ஒரு நல்ல கலையம்சமான கருத்து இருக்கும்.. இந்த படம் எனக்கு கொஞ்சம் சிறப்பானது.. ஒவ்வொரு முறையும் நான் பார்க்கும் போதும் எனக்கு புதுப்புது தகவல் தோணும்!!.. எனக்கா தோணும் 🙂 “தமிழ் மெல்ல சாகும்” அப்படினு தன்னோட எல்லா படத்துலயும் சொல்ற மாதிரி இந்த படத்துலயும் சொல்லுவாரு. ம்ம்க்கும்!அது உனக்கு இப்ப தான் தெரிஞ்சுதா அப்டினு நீங்க கேக்குறது நல்லாவே கேக்குது… ஒரு நிமிஷம் பொறுமையா இருங்கப்பா, நான் சொல்ல வந்தத இன்னும் சொல்லவே இல்ல.. முடிச்சதும் ஒங்க கருத்த சொல்லுங்க, உருத்தா சொல்லுங்க.. ok!!..

படத்துல ஒரு காட்சில அமெரிக்காவோட இஃபிளச்சர் மல்லிகா அம்மணியோட ஜீப்ல போவாரு.. அப்ப என்ன ஊர்னு யோசிக்கைல, மல்லிகாம்மணி “சிதம்பரம்” சொல்லும்போது.. கமல் சார் கண்டு பிடிச்ச சந்தோஷத்துல ஊர் பேர “சீ-டாம்ப்-ரம்” அப்டிம்பாரு.. நீங்களும் “சூப்பரப்பு” அப்டினு கைத்தட்டி விசில் அடிச்சிருப்பீங்க, இல்லையா??.. அட ஆமாங்கன்னா நானும் அடிச்சேன்.. இன்னைக்கு படம் பார்க்கைல மொளச்ச பிரச்சனையே இது தான்.

அட, நம்ம ஊர்க்கார பயலுக மதர் டங் இனஃப்ளுயன்ஸ் வராம இருக்க பட்ற பாட்ல, மதர் டங்’கயும் பாதுகாக்கனுல.. ஏனுங்க ENTட காமிக்கிறீங்கள.. என்ன லொள்ளுங்களா, நான் சொன்ன மதர் டங் “தமிழ்”.. ரெண்டு விசயம் பண்ணலாம்லங்க!!

1) எங்க H தேவயோ எலவ போட்டுடோம்னா, அடியோட அவன் பேரயே மாத்துரது கொறையும்லங்க. வெள்ளக்காரன் வாய்ல வரமாட்டேங்கிதுனு சொன்னானா என்ன.. சும்மா நாமலே உசுப்பேத்திவிடறது

2) nationalல நாம “நேஷனல்”லுனு தான படிக்கிறோம்.. “னே-டியோ-னால்” இல்லயே. எங்க சிலபல் போடனும்னு நமக்கு அவன்(ர்) கத்துத்தரும் போது.. கல் தோன்றி மண் தோன்றும் முன்னமே தோன்றிய நமக்கு சொல்லித்தர தெரியாதா என்ன??

இனிமே எப்டி ஊர் பேரெல்லாம் அரசாங்க பதிவேட்ல இருந்து மாத்துரதுன்னு யோசிக்காம தமிழ்நாட்டின் தலைநகரத்தோட பேர மாத்தின மாறி எல்லா ஊருக்கு மாத்துனா எவ்ளோ நல்லா இருக்கும்.. ஏதோ தோணுச்சு, சொல்லிட்டேன்!!. இப்ப உங்க கருத்த சொல்லுங்க..

Advertisements

2 Comments »

  1. தமிழ் அப்படிங்கிறதயே, நம்ம TAMIL அப்படின்னு தப்பா எழுதுறோம். THAMIZH அப்படின்னுல எழுதனும்.

    உன்னோட தமிழ் பற்றை வரவேற்கிறேன்!

    Comment by Vijay — December 4, 2011 @ 9:46 am

  2. விஜய் அது தான் என்னோட அடுத்த பதிவே 🙂

    Comment by Anantha — December 4, 2011 @ 2:31 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.