சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

October 9, 2009

குடத்தில் அடைத்த பாம்பும் எள்ளும் ஒன்றே – காளமேகப் புலவர்

Filed under: இல‌க்கிய‌ம் — Anantha @ 12:29 pm

ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற் பிண்ணாகுமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது

பாம்பு
ஆடிக் குடத்தடையும் – படமெடுத்து ஆடிய பின்னே குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் – ஆடும் போது ‘ஸ்’ என்று இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் – குடத்தை மூடித்திறந்தால் முகத்தை எட்டிக் காட்டும்
ஓடிமண்டைபற்றிப் பரபரெனும் – விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டால் பரபரவென சுற்றிக் கொள்ளும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் – உலகில் பிளவு பட்ட நாக்கை உடையதாயிருக்கும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது – (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

எள்
ஆடிக் குடத்தடையும் – செக்கில் ஆடி எண்ணையாய் குடத்தில் அடையும்
ஆடும்போதே இரையும் – செக்கில் ஆடும் போதே இரைச்சல் போடும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் – மூடியைத் திறந்தால் எண்ணையைப் பார்ப்பவரின் முகத்தை தெளிவாகக் காட்டும்
ஓடிமண்டை பற்றிப் பரபரெனும் – விரைய மண்டையில் தேய்த்துக் கொண்டால் பரபரவென குளிர்ச்சி தரும்
பாரிற் பிண்ணாகுமுண்டாம் – உலகிலே பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்
உற்றிடு பாம்பு எள்ளெனவே ஓது – (இதனால்) உள்ளே அடைத்த பாம்பும் எள் என்று சொல்லுக

Advertisements

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.