சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

August 10, 2009

விதியா!!.. ச‌தியா??….

ச‌னிக்கிழ‌மை முடிஞ்ச‌ திருவிழான‌ல‌யோ என்ன‌வோ, சூரிய‌ன் கொஞ‌ச‌ம் ம‌ந்த‌மா தான் இருந்தான். ஆனாலும் அந்த‌ நாலு மாச‌த்துக்காக‌ காத்துட்டு இருந்த‌ ம‌க்க‌ள‌ ஏமாத்த‌க்கூடாதுங்க‌ர‌துல‌யும் ரொம்ப‌ அக்க‌றைய‌ ந‌ட‌ந்துகிட்டுதான் இருந்தாரு. வெளில‌ அந்த‌ வெயில்ல‌ கொட்ட‌ ம‌டிச்சு விளையாடி கூதுக‌லிக்க‌ சிறுவ‌ர்க‌ளும், அதில் தான் காய‌ ஆசைப்ப‌டும் இங்கிலாந்து ம‌க்க‌ளுக்கும் விருந்த‌ளிக்க‌ வ‌ந்த‌ ஒரு ஞாயிற்று கிழ‌மை அது.

ந‌ம்ம‌ க‌தையின் நாய‌கன் ஆன‌ந்து, அந்த‌ விடுமுறைய‌ன்றும் வேலை இருந்ததை எண்ணி நொந்த‌வாரே சென்றான். ஆன‌ந்து பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌தெல்லாம் இந்தியால‌ தன்னுடைய‌ அறிவுக்கு இன்னும் அறிவை சேர்க்க‌ மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ வ‌ந்த‌ ஒரு தென்னிந்திய‌ன். ப‌யிலும் போது த‌ன் விடுமுரையை உருப்ப‌டியாய் செல‌வு ப‌ண்ண‌ எண்ணி ப‌குதி நேர‌ வேலை பார்த்து வ‌ந்தான். த‌ன்னுடைய‌ போக்குவ‌ர‌த்க்கு உத‌வியாய் ஒரு மிதிவ‌ண்டி வாங்கி இருந்தான். அதுல‌ தான் அவ‌ன் க‌ல்லூரி, க‌டை, வேலைக்கு என‌ எல்லா இட‌த்துக்கும் போவான்.

 த‌ன் பொழுதை முழுவ‌துமாய் தான் வேலை பார்த்த‌ க‌டைக்கு அர்ப்ப‌ணித்து விட்டு மாலை வீடு திரும்பி கொண்டு இருந்தான். அப்போது திடிர் என்று எதிர் பாராதவ‌ன்ன‌ம் ஒரு 15வ‌ய‌து ம‌திக்க‌த‌க்க‌ ஒருவ‌ன் அவ‌னை இன்னொரு மிதிவ‌ண்டில‌ இடைம‌றிக்க‌, கார‌ண‌ம் கேக்க‌வும், த‌ன்னை வ‌ழிம‌றித்த‌ வித‌த்தில் கீழே விழுந்துவிட‌க் கூடாதுங்ர‌‌ க‌வ‌னத்துல‌யும் த‌ன் வ‌ண்டியை நிறுத்தினான்.

ந‌ம்ம‌ ஊரு வாய்க்கால்ல‌ ஒடிவ‌ர்ர‌ த‌ண்ணிய‌ அடைக்க‌ ம‌ம்மெட்டில‌ இருந்து ம‌ண் பாஞ்சு வ‌ந்து ம‌றைக்கும். நீர் எங்க‌ வெல‌கி ஓடிருமோன்னு இன்னொரு கை ம‌ண்னோட‌ ம‌ண்வெட்டி அடைக்கிற‌ மாதிரி, இன்னொரு மிதி வ‌ண்டில‌ வ‌ந்த அவ‌னோட‌ ந‌ண்ப‌ன் எதிர் ம‌றைக்க‌ ச‌ற்றே குழ‌ப்ப‌துட‌ன் அவ‌ர்க‌ளை எதிர்னோக்கி கார‌ண‌ம் வின‌வினான் ஆன‌ந்து. த‌ங்க‌ளை நோக்கி ந‌ட‌ந்து வ‌ந்துகொண்டிருந்த‌ மூன்றாவ‌து ஆளை நோக்கி அவ‌னை எத‌ற்காக‌ இடித்து விட்டு வண்டியை நிறுத்தாம‌ல் வ‌ந்தாய் என‌ கேட்டான் முத‌லில் ம‌ரித்த அந்த‌ ம‌ண்ணின் மைந்தான். ஏதோ த‌வ‌று ந‌ட‌க்க‌ போவ‌தாய் எண்ணி காவ‌ல்துரையை தொட‌ர்பு கொள்ள‌ த‌ன் கைபேசியை உப‌யோகிக்க‌, க‌டுப்பான‌ ஒருவ‌ன் ஆன‌ந்துவின் மூஞ்சியில் ஒரு குத்து விட‌, த‌ன் நிலையை புரிந்துகொள்ளும் முன் இன்னொருவ‌ன் அவ‌னை உதைக்க‌, நிலைத‌டுமாறி சாலையின் மூலையில் விழுந்தான். ம‌ண்னின் மைந்த‌ர்க‌ளில‌, ந‌ட‌ந்து வ‌ந்த‌ மூன்றாம‌ன் ஆன‌ந்துவின் வண்டியை எடுத்துக்கொண்டு மின்ன‌லின் வேக‌த்தை மிஞ்சுவ‌து போல அங்கிருந்து செல்ல‌, அவ‌னை தொட‌ர்ந்து ம‌ற்ற‌ இருவ‌ரும் அந்த‌ இட‌த்தை காலி செய்த‌ன‌ர்.

ச‌ன‌ நொடி பொழுதில் த‌ன் வ‌ண்டியை இழ்ந்து சாலையின் மூலையில் கிட‌ந்த‌ ஆன‌ந்து த‌ன் நிலையை உண‌றும் முன், சாலையின் எங்கிருந்தோ வ‌ந்த‌ இருவ‌ர் அவ‌ன் தூக்கி விட்டு அவ‌ன் மேலுள்ள‌ தூசை த‌ட்டிவிட்டு அவ‌னை விசாரிக்க‌ அவ‌ன் நட‌ந்த‌தை அவ‌ர்க‌ளிட‌ம் விள‌க்கினான். கேட்ட‌ அவ‌ர்க‌ள் அந்த‌ ம‌ண்னை கேவ‌ல‌ப்ப‌டுத்திய‌ மைந்த‌ர்க‌ளை திட்டிய‌வாறு அவ‌னிட‌ம் ம‌ன்னிப்புக்கேட்டு கொண்ட‌ன‌ர். இங்கு ந‌ல்ல‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் இது மாறி ஒரு சிலரால் எல்லோரையும் த‌வ‌ராய் எண்ண‌ வேண்டாமென்று சொல்லி ஆன‌ந்துவின் கைபேசியில் இருந்தே காவ‌ல் துரைக்கு தொட‌ர்பு கொண்ட‌ன‌ர்.

எல்லாம் முடிந்த‌தும் வ‌ருவ‌தும், வ‌ந்து வ‌க்க‌ன‌யாய் கேள்வி கேட்ப‌தும், பின் காவ‌ல்துரை த‌ன் க‌ட‌மையை செய்யும் அப்ப‌டின்னு சொல்ர‌தும் ந‌ம‌க்கு ஒன்னும் புதுசு இல்ல‌ தான் ஆனா வ‌ள‌ர்ந்த‌ நாடுக‌ள்னு நாம‌ விய‌க்கும் இட‌ங்க‌ளிலும் இதையே கேக்கிறோமேன்னு நொந்த‌ ஆன‌ந்துக்கு அவ‌னை தூக்கிவிட்டு பேசின‌வ‌ங்க‌ளின் பேச்சுதான் ச‌ற்று ஆறுத‌லாய் இருந்த‌து. விதியை நொந்துகொண்டான்.

***வ‌ண்டியை திருடிய‌ ச‌ந்தோஷ‌த்தில் அந்த‌ மூணு பேரும் த‌ங்க‌ள் கைக‌ளை த‌ட்டிக்கொண்ட‌ன‌ர். த‌த்த‌ம் பாராட்டை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். ந‌ட‌ந்து வ‌ந்து பின் வ‌ண்டியுட‌ன் சென்ற‌ மூன்றாம‌வ‌ன் வ‌ழி ம‌றைத்த‌ முத‌லாம‌வ‌னை பார்த்து ” ச‌பாஷ் 1, ச‌ரியான‌ இட‌த்தில் அவ‌னை வ‌ழிம‌றைத்தாய், ஒரு 50மீ த‌ள்ளி சென்றிருந்தால் கூட‌ க‌ண்கானிப்பு கேமிராவில் ப‌திவாகி இருப்போம்”னு சொல்ல‌ அவ‌ன் இர‌ண்டாம‌னை பார்த்து “பாராட்டுக்கு உரிய‌வ‌ன் 2 தான், அவனோட‌ அசாத்திய‌ தைரிய‌ம் இல்லைனா ந‌ம்மால‌ இத‌ செஞ்சிருக்க‌ முடியாது, அவனை அடித்து நிலைகுல‌ய‌ செய்ய‌லேனா, ந‌ம்மால‌ நாம‌ நின‌ச்ச‌த‌ செய்திதிருக்க‌ முடியாது.” அப்டினு பாராட்ட 2’ம‌வ‌னொ ஒரு விஷ‌ம‌ சிரிப்பு சிரித்த‌வாறே “எங்கிருந்தோ வ‌ந்து ந‌ம் நாட்டில் ச‌ம்பாத்திய‌ம் செய்து அவ‌ர்க‌ள் நாட்டுக்கு ப‌ண‌த்தை க‌ட‌த்தும் இவர்க‌ளிட‌ம் நாம் க‌ட‌த்துவ‌தில் த‌வ‌றென்ன‌? அது ம‌ட்டுமில்லை நண்பா நான் ம‌ட்டுமில்லை அவ‌னை நிலைகுல‌ய‌ செய்த‌து அதில் 1ன் ப‌ங்கும் இருந்த‌தே ப‌ய‌ன் த‌ந்த‌து. ஆனால் அந்த‌ ஒரு நொடியினை ம‌ட்டும் 3 உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல் இருந்திருந்தால் எல்லாமே வீண் ஆகி இருக்கும், நாம் மாட்ட‌க் கூட‌ வாய்ப்பு அமைந்திருக்கும்”னு சொல்லி ந‌ண்ப‌ர்க‌ள் மூணு பேரும் க‌ட்டி அனைத்துக்கொண்ட‌ன‌ர்.

“இப்ப‌டி ஒங்க‌ளை பாராட்டிக்கொண்டு உங்களுக்கு திட்ட‌ம் போட்டு கொடுத்த‌ என்னை ம‌ற‌ந்துவிட்டீர்க‌ளே என்று கூறிய‌ப‌டி சிரிப்புட‌ன் வ‌ந்த‌வ‌னை பார்த்து “உங்க‌ள் திட்ட‌ம் ம‌ட்டுமில்லை, நாங்க‌ள் வ‌ண்டியை எடுத்துவ‌ரும் போது அவ‌ன் எங்க‌ளை துர‌த்தாத‌வ‌ன்ன‌ம் வ‌ழிப்போக்க‌ன் போல் வ‌ந்து எங்க‌ளை துவேசித்து, அவ‌னுக்கு ப‌ரிதாப்ப‌டுவ‌து போல் பேசி அவ‌னை நிறுத்தி வைத்த நீங்க‌ள் எங்க‌ள் குரு” என்ற‌ன‌ர்.

பி.கு: இதை வெறும் கதையாக‌ ம‌ட்டும் பாவியுங்க‌ள்

Advertisements

1 Comment »

  1. ட்ரூத் இஸ் ச்ற்றேன்ஜர் தேன் பிக்ஷன்னு சொல்வாங்க. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

    http://kgjawarlal.wordpress.com

    Comment by Jawahar — August 20, 2009 @ 12:43 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.