சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

March 2, 2009

உன் விழி ஓய‌.. என் விழி மொழியுது..

சித்திர‌மே, முத்தார‌மே!!.. ப‌ட்டுத்
தூரிகையின் ஓவிய‌மே… உந்த‌ன்
ப‌க்க‌த்திலே நாங்க‌ளுண்டு தாலேலோ – நீ
ந‌வ‌ம‌ணியின் ஒற்றையுருவ‌ம் தாலேலோ…


இந்திர‌னோ, ம‌ன்ம‌த‌னோ!!.. நீ
என்ன‌செய்ய‌ வ‌ந்த‌வ‌னோ… உன்
ப‌ணிக்கின்னும் நேர‌முண்டு தாலேலோ – நீ
ப‌த்திர‌மாய் துங்கிட‌டா தாலேலோ…

சின்ன‌த்தொப்பை செரித்திடுதோ!!.. க‌ன்னா
சீக்கிர‌மே ப‌சித்திடுதோ… சேதியென்னா
சொல்லுயென் செல்ல‌க்கிளியெ தாலேலோ – உன்
செவ்வித‌ழை நான்நிரைப்பேன் தாலேலோ…

பாலுமிங்கே புளிக்கிற‌தோ!!..அன்ன
ஆகார‌மும் அலுத்திட்ட‌தொ..  உன‌க்கு
ப‌ட்டினிவேண்டாம் ப‌ட்டுக்கண்ணா தாலேலோ – இந்த‌
பாரினில் தேர்வுக‌ள் க‌ம்மிய‌டா தாலேலோ…

அட்ச‌ய‌த்தை பெற்றிடுவேன்!!.. அதில்
அமுதுதிட்டு த‌‌ருவேன்.. நீ
உண்டுக‌ண்டு நான் சிரிப்பேன் தாலேலோ – இங்கு
உள்ள‌தெல்லாம் உன‌க்கேய‌டா தாலேலோ…

சூரிய‌னின் ஜோதியினை!!.. உந்த‌ன்
க‌ண்க‌ளிலே கொண்டாயோ… அந்த
க‌திர் உந்த‌ன் க‌ண்ணிமையோ தாலேலோ – நான்
க‌ருமையிட்டு வெயில்த‌ணிப்பேன் தாலேலோ…

பட்டு வ‌ண்ண‌ ஆடைக‌ட்டி!!.. அழ‌கு
ப‌ஞ்ச‌வண்ண‌  தூளியிட்டேன்… செல்ல‌ம்
ப‌க்குவ‌மாய் க‌ண்ணுர‌ங்கு தாலேலோ –  உனை
பார்த்துக்கொள்ள‌ மாம‌ன்னுண்டு தாலேலோ…
உனை பார்த்துக்கொள்ள‌ மாம‌ன்னுண்டு தாலேலோ…

Advertisements

6 Comments »

 1. I love this verse….

  சூரிய‌னின் ஜோதியினை!!.. உந்த‌ன்
  க‌ண்க‌ளிலே கொண்டாயோ… அந்த
  க‌திர் உந்த‌ன் க‌ண்ணிமையோ தாலேலோ ¬ நான்
  க‌ருமையிட்டு வெயில்த‌ணிப்பேன் தாலேலோ…

  Beautiful thinking da……first without interest i read this and then read that “antha naal gnabagam” in which i literally laughed in this isolated room for the lines “karadiku theengilaitheno”…ha ha….good one…

  Now u have woke me again in starting my mokkai kavithai….now u can’t stop me……U too don’t stop and continue ur good work…….

  Comment by ganyindia — March 2, 2009 @ 9:16 pm

 2. தமிழை வாழ வைக்கும் தம்பி அனந்தாவிற்கு வாழ்த்துக்கள்

  Comment by விஜய் — March 6, 2009 @ 4:03 pm

 3. super kavithai? da
  carry on with new things

  Comment by rajkumar — March 6, 2009 @ 5:56 pm

 4. Thanks Vijay and All the best Ganesh for your amazing works… Expecing them…

  Comment by Anantha Ramakrishnan — March 6, 2009 @ 7:28 pm

 5. Hey Raj,, Surprising da.. I did not expect that u ll c and comment it… Thank you very much

  Comment by tamilanin — March 6, 2009 @ 8:09 pm

 6. Hey..amazing..Keep up the good work!!

  Comment by Ranjani — May 3, 2009 @ 2:37 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Blog at WordPress.com.