சித்திர‌ம் பேசுத‌டீ…. (A Tamilanin Attempt)

July 4, 2010

கருத்துள்ள‌ க‌தைக‌ள்

Filed under: க‌தை — Anantha @ 1:00 am
Tags:

ஒரு மீனவன் ஒரு நாள் விடியறதுக்கு முன்னாடியே சீக்கிரமா எழுந்திரிச்சுட்டான். முந்துன நாள் அமாவாசைங்றதுனால கடற்கரைல வெளிச்சமே இல்லை. அதுனால சூரியன் உதிக்கிற வரைக்கும், கடலுக்குள்ள போக முடியாது. அவன் பக்கத்துல சின்னச் சின்னதா கொஞ்சம் கற்கள் இருந்தன. சரின்னு பொழுது போறதுக்காக, அந்தக் கற்களை ஒன்னொன்னா எடுத்து கடலுக்குள்ள வீசி விளையாட ஆரம்பிச்சான். கடைசி கல்லு ரொம்ப ரொம்பச் சின்னக் கல்லு. அந்தக் கல்ல கைல எடுத்தப்ப விடிய ஆரம்பிச்சது. வெளிச்சத்துல பார்க்கும்போதுதான் அவ கையிலயிருந்தது வைரக்கல்லுன்னு தெரிஞ்சது. அப்பத்தான் அவன் தன்னோட துரதிர்ஷ்டத்தை உணர்ந்து, எல்லா கற்களையும் கடலுக்குள்ள வீசியெறிஞ்சிட்டதை நினைச்சு வருத்தப்பட்டான்.

கதை சொல்லும் பாடம்:காலையில சீக்கிரமா எழுந்திருக்கக் கூடாது

ஆமையும் முயலும் +2 எக்ஸாம் எழுதிச்சுதுங்க. ஆமை 1109 மார்க் தான் எடுத்தது. முயல் 1124 எடுத்துடுச்சி. ஆனாலும் இஞ்சினியரிங் சீட் கவுன்சிலிங்ல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்கு சீட் கிடைக்கல.

ஏன் தெரியுமா?
செகண்ட் ஸ்டாண்டர்ட்லேயே முயல் ஆமை ரன்னிங் ரேஸ்ல ஆமைதானே ஜெயிச்சுது. ஸ்போர்ட்ஸ் கோட்டா இருக்குல்ல?!

இருட்டு நகரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது. அந்த லைப்ரரியில் இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு. அந்தப் பக்கம் இரண்டு Coloumnகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்னத் தெரிகிறது? யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

நோ, நோ, நோ. அழக்கூடாது!!!இன்னும் இருக்குல‌

ஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா!
Rat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா! நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு.

அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா?“ம்யாவ்”னு சொல்லிச்சு.

கத கேக்குற வயசா இது. Commenta போட்டுட்டு போய் வேலயப் பாருங்கப்பா…

Like This!

5 Comments »

  1. உலக மொக்கையா இருக்கே!!! காலங்காத்தால இத படிச்சேன்… உஷ்ஷ் அப்பா இப்பவே……..

    Comment by Vijay — July 5, 2010 @ 6:05 am

  2. comment vanthucha

    Comment by Palaniappan RM R — July 7, 2010 @ 11:21 am

  3. அவ்வ்வ்வ் அழுதுருவேன் !!!!!!!!!

    Comment by S.Raja — March 3, 2012 @ 12:43 pm

  4. ungalalamattum eppadi idhumariyellam yosikkamudiyudhu…. wow..!

    Comment by Arulselvamkalaivani — February 16, 2013 @ 9:52 am

  5. thalai suthuthuthu yen kayila kadacha avalvuthan

    Comment by bala — January 27, 2014 @ 1:51 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment

Create a free website or blog at WordPress.com.